fbpx
Homeபிற செய்திகள்குன்னூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்காக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவி நீலகிரி மாவட்ட...

குன்னூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்காக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவி நீலகிரி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (செப்.16), மெட்மீம்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.6.5 இலட்சம் மதிப்பில் நன்கொடையாக பெறப் பட்ட, கர்ப்பிணிகளுக்கான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தினை, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை குன்னூர் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனங்கள் அதிகப்படியான உதவிகளை செய்து வருகின்றன.

கர்ப்பகாலத்தில் 11 முதல் 13 வாரம் வரை கர்ப்பகால அளவு, 18 முதல் 22 வாரம் வரை சிசுவின் பிறவி குறைபாடு, 28 முதல் 32 வாரம் வரை சிசுவின் வளர்ச்சி, 36 முதல் 40 வாரம் பாதுகாப்பான பிரசவம் திட்டமிடுதல் என குறைந்த பட்சம் 4 முறை ஸ்கேன் எடுக்க வேண்டும்.

இதுவரை ஸ்கேன் எடுப்பதற்காக கர்ப்பிணிகள் உதகை அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தனர். இன்றைய தினம் மகேஷ் நைத்தானி- மெட்மீம்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் ரூ.6.5 இலட்சம் மதிப்பில் ஓட்டுப்பட்டறை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தினை நன்கொடையாக தந்துள்ளனர்.
அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வசதியின் மூலம் குன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இல வசமாக ஸ்கேன் வசதி அளிக்கப்படும்.
ஸ்கேன் எடுப்பதன் மூலம் கர்ப்ப கால சிக்கல்களை கண்டறிந்து பாதுகாப்பான பிர சவத்திற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

கர்ப்பகால சிக்கல் களால் ஏற்படக் கூடிய குழந்தை உயிரிழப்புகளை குறைக்க ஸ்கேன் வசதி மிகவும் உதவியாக இருக் கும். குன்னூர் அரசு மருத்துவமனையிலேயே ரேடியோலஜி மருத்துவர் உள்ள காரணத்தினால் அனைத்து கர்ப்பிணிகளும் இங்கேயே ஸ்கேன் எடுத்து கொள்ளலாம்.

இதன்மூலம் சுமார் 700 கர்ப்பிணிகள் பயனடைவார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ் வேஷ்வரி, குன்னூர் நகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் வட்டாட்சி யர் தினேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர் ஜனார்த்தனன், குன்னூர் நகராட்சி சுகாதார அலுவலர் மரு.ரகு நாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஹாஜிராபேகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img