fbpx
Homeதலையங்கம்மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம்

மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்த பின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் தலை நிமிர்ந்துள்ளது. அதற்கு நேற்று முன் தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமே சாட்சி.

திருவிழாவை போல மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது மாபெரும் சாதனை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான முகாம் நடத்தப்பட்டு இவ்வளவு பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

தமிழகத்தில் ஆறு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் 66 சதவீதம் அதாவது 4 கோடியே 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னு தாரணமாக திகழ்கிறது.
தமிழகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமையும் தமிழக அரசு எடுத்துவரும் முயற் சிகளையும் மத்திய சுகாதார துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.

மூன்றாவது அலை வந்தாலும் எதிர் கொள்ள தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களை காக்க மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

படிக்க வேண்டும்

spot_img