fbpx
Homeபிற செய்திகள்இலவச ஆதார் தகவல் திருத்த முகாம்

இலவச ஆதார் தகவல் திருத்த முகாம்

கோவை வடவள்ளி அடுத்த, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், கோவை அஞ்சல் கோட்ட இந்திய அஞ்சல் துறையின் சார்பிலும், பாப்பநாயக்கன் புதூர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையின் சார்பிலும், பொதுமக்களுக்கான ஆதார் பதிவு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

முன்னதாக இந்த முகாமில் பங்கு பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்த பொதுமக்களுக்கு, ஆதார் அட்டையில், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் போன்ற பல்வேறு பணிகளை இன்று பொதுமக்களுக்கு செய்து வழங்கினர்.

இதுகுறித்து ஏஐடியுசி அமைப்பின் பொதுச்செயலாளர் தங்கவேலு கூறுகையில், “நம் நாட்டில் ஆதார் தனிமனிதனின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றது.

ஆதார் அட்டைகளில், பொதுமக்கள் பெயர் மாற்றவும், திருத்தம் செய்யவும் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களின் அலைச்சலை குறைக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img