fbpx
Homeபிற செய்திகள்அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை நல்லடக்கம் செய்த பெண் காவலர்

அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை நல்லடக்கம் செய்த பெண் காவலர்

மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை நல்லடக்கம் செய்த அன்னூர் பெண் தலைமைக்காவலருக்கு பாராடுக்கள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியில் கடந்த சில தினங் களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 55 வயது மதிக்கத்தக்க முதியவர் மரணமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் காவல் துறையினர் விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பத்திவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் யார் ? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் இறந்தவரது சடலத்தை அன் னூர் காவல் நிலைய தலைமை பெண் காவலர் பொன்மணி பெற்று உரிய சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்துள்ளார்.

அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை உரிய சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்த அன்னூர் தலைமைப்பெண் காவலருக்கு பல் வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img