fbpx
Homeதலையங்கம்மாணவர்களுக்கு பயனுள்ள அறிவிப்பு

மாணவர்களுக்கு பயனுள்ள அறிவிப்பு

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இனி பஸ் பாஸ் வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பாராட்டி வரவேற்கத்தக்கது.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் சென்னை போக்குவரத்து கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாண வர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை விரிவாக அனுப்பி வைத்துள்ளன. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறி விக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதலாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் பஸ்களில் இல வசமாக மாணவ, மாணவிகள் பயணிக்கலாம் என அறிவிப்பு வந்ததும் பெற்றோர்கள் மிக மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

ஏற்கனவே மாணவ, மாண விகளுக்கு அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக அளிக்கப்படுகிறது.

தற்போது இலவச பஸ் பயணம் என்பதால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் இலவசமாக பள்ளிக்கு வந்து செல்ல முடியும். தமிழக அரசுக்கு பெற்றோர்கள் பாராட்டும் நன் றியும் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img