மாநில மற்றும் மாவட்ட எல்லை சோத னைச் சாவடிகளில், காவல் துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வலியுறுத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை (ஜூலை 31) கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
முதல்வர் அறிவுரையின்படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதன் காரணமாக, தற்போது தொற்றுபரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.
அதன்படி அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை விரைந்து கண்டறிய விரைவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப் படுத்துவதன் மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் கூடா மல் கண்காணிக்கவும் பொதுமக்கள் அனை வரும் கட்டாயம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவதை முறையாக காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணித்திடவேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பணி யினை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு கட் டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில் பிற மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் கண் காணிப்பு பணியினை தீவிரப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொது மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண் டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
அரசால் மேற் கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இவ்வாறு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
இக்கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர் ஜெயசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.சந்திரா துணை இயக் குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.செந்தில் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



