கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது திருநெல்வேலி மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் அனைத்து நகைகளிலும் ஒரு கலை நயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளது.
கண்காட்சியை ராமசாமி ராஜா, முத்துபாண்டியன், அர்ச்சனா மாரி பாண்டியன், லட்சுமி நடராஜன், அனிதா சித்தார்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலை நயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’பிரம்மாண்டமான வடிவமைப் புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட‘எரா’மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’நகைகள் கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன், உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய நகரங்களில் 17 கிளைகளை கொண்டுள்ளது.
கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். கண்காட்சி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில், நிஷாந்த், துணை கிளை தலைவர் மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ், திருநெல்வேலி மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.



