கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாக சமூக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று சாதனையாளர்களுக்கு அவர்களின சேவையை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த சமூகப்பணிக்கான தலைமைப் பண்பு தலைவர் விருதை கோவை பீட்டர் அமைதி நிறுவனம் வழங்கி கௌரவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் அன்னையின் கரங்கள் நிர்வாகி ஜெனிப்பர், கோவை சரவணம்பட்டி ஃபீடு தி சிட்டி மிஷன் வி.ஜான் சாமுவேல், கோவை கணபதி ரம்யா (எ) மாலதி (கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க கோவை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்) ஆகியோருக்கு பேராயர் டாக்டர் ஸ்டான்லி பீட்டர் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கினார்.
விருதுக்குரியவர்கள் சிறப்பு விருது குழு அமைத்து, பணித்தன்மை, சேவையின் அர்ப்பணிப்பு, பன்முகத்தன்மை அடிப் படையில் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
இத்தகவலைத் துணைத்தலைவர் இ.டெய் சிபிரேமலதா தெரிவித்தார்



