Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம்

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம்

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் ஆகிய கிளைகளில் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

அவர் பேசுகையில், இவ்வங்கி தமிழகத்திலேயே தொடர்ந்து மூன்று ஆண்டுகள், சிறந்த வங்கிக்கான விருதை பெற்றுள்ளது.

டி.ஜி.புதூர் கிளை, புதியதாக துவங்கிய 10 மாதங்களில் வைப்புத் தொகை 17.32 கோடி சேகரித்து 2.71 கோடி அளவில் கடன்களையும் வழங்கியுள்ளது.

வங்கி சிறப்பாக செயல்பட வாடிக்கையாளர்களே முக்கிய காரணம் என்றார்.
டி.ஜி.புதூர் மற்றும் டி.என்.பாளையம் கிளைகளில் புதியதாக இரண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களை துவக்கி வீட்டு வசதிக்கடன் மாற்றுத்திறனாளி கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், சிறுவணிகக்கடனாக 17 பயனாளிகளுக்கு 72.55 இலட்சம் கடனுதவி வழங்கினார்.

வங்கி நிர்வாகக்குழு இயக்குநர் ஜெயலட்சுமி, கிளை மேலாளர்கள் செல்வக்குமார் சம்பத், வங்கி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img