புரட்சிகர ஆற்றலுடன் சிறந்த செயல்திறன்மிக்க ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஐக்யூஓஓ நிறுவனம், அதன் ஐக்யூஓஓ 7 ஸ்மார்ட்போனில் புதிய ஆரஞ்சு நிற மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனை அமேசான் பிரைம் டேயில் (ஜூலை 26, 27) துவங்கி உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டு உடன் வரும் இதன் விலை 31,990 ரூபாய் ஆகும்.
இதன் பின்புற பேனலில் உள்ள ஆரஞ்சு நிறம் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பிக்சல்களின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்யூஓஓ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர் ககன் அரோரா கூறுகையில், ஐக்யூஓஓ 7 இளம் தலைமுறையினருக்கும், புதிய தொழில்நுட்பம் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும்.
இந்த ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது புதிய ஆரஞ்சு நிற வண்ணத்தில் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்றார்.
ஸ்மார்ட்போன் குறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் மொபைல்போன்ஸ் மற்றும் டெலிவிஷன் இயக்குனர் நிஷாந்த் சர்தானா கூறுகையில், சிறந்த செயல்திறன்மிக்க தயாரிப்புகளை சிறப்பான விலையில் அமேசானில் விற்பனை செய்து வருகிறோம்.
அந்த வரிசையில், ஈடில்லா செயல்திறன், கேம் விளையாடுவதற்கு ஏற்ற மற்றும் மல்டி மீடியா பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன் கிடைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். சிறப்பம்சங்கள்
- ஸ்மார்ட்போனின் பின்புற கவர் புதிய ஆரஞ்சு வண்ணத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பிக்சல்களின் கலவையாக வந்துள்ளது.
- சிறந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி இயங்கு தளம் மற்றும் சுயாதீன டிஸ்பிளே சிப்பைக் கொண்டுள்ளது
- 4,400 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ்
- சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்க பின் புறத்தில் 48எம்பி பிரதான கேமராவுடன் 3 கேம ராக்களை கொண்டுள்ளது
- இந்த புதிய ஆரஞ்சு நிற ஸ்மார்ட்போன் விலை ரூ. 31,990. இது அமேசான்.இன் மற்றும் அதிகாரப்பூர்வ மின்னணு இணையதளங்களிலும் கிடைக்கிறது.



