fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனையில் எக்கோ கார்டியோகிராம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை அரசு மருத்துவமனையில் எக்கோ கார்டியோகிராம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்கோ கார்டியோகிராம் (ECHO CARDIOGRAM) மற்றும் அல்ட்ரா சோனோகிராம் (ULTRA SONOGRAM) கரு விகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேற்று துவக்கி வைத்தார்.

ஹீமோபிலியா நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாமி லும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல் வர் மரு.நிர்மலா மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகளும் கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே கிடைத்திடும் வகையில் சிறப்பான மருத்துவ கட்டமைப்பு வசதிகள், நவீன நோய் கண்டறியும் கருவிகளும் உயிர்காக்கும் கருவிகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

அதன்படி ரூ.30 இலட்சம் மதிப்பில் இருதய துறை வளாகத்தில் தனியார் பங்களிப்பு டன் புதிதாக எக்கோ கார்டியோ கிராம் கருவி மற்றும் அல்ட்ரா சோனோகிராம் கருவிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக் கப்பட்டுள்ளன.

இதயத்தை துல்லியமாக ஸ்கேன் செய்து பார்க்கும் நவீன கருவியான எக்கோ கார்டியோகிராம் கருவி நோயா ளிகளின் இதய இரத்த ஓட்டம் மற்றும் இதயதிறனை துல்லியமாக கண்டறிய முடியும்.

கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு உடலில் கை மற்றும் கால் இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்த கட்டுக்களை கண்டறிய அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மருத்துவமனையில் நோயாளிகள் நலனிற்காக நிறுவப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பி ணிகள், காப்பகங்களில் உள்ள முதியோர் என பல்வேறு தரப்பினருக்கும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதன்படி இரத்தம் உறையும் தன்மை குறைந்த (ஹெமோபிலியா -hemophilia) கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img