fbpx
Homeபிற செய்திகள்‘6ஜிபி ரேம்’, 48 எம்பி பின்புற கேமரா: விவோவின் புதிய ஒய்51ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்

‘6ஜிபி ரேம்’, 48 எம்பி பின்புற கேமரா: விவோவின் புதிய ஒய்51ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ நிறுவனம், இதன் ஒய் மாடல் ஸ்மார்ட் போன்களின் விரிவாக்கத் தின் ஒரு பகுதியாக புதிய ‘ஒய்51ஏ’ ஸ்மார்ட் போனை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 16,990 ரூபாய் ஆகும்.

இதில் 48 எம்பி பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேரங்களில் மிகத் துல்லியமாக படங்களை எடுக்கவும் வீடியோ எடுக்கவும் முடியும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் விதமாக அதிக சக்தி வாய்ந்த 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் டைடானியம் சபையர் மற்றும் கிறிஸ்டல் சிம்பொனி ஆகிய 2 வண்ணங்களில் இந்தியா முழுவதும் ஆப்லைன் ஸ்டோர்கள் மற்றும் விவோ இந்தியாவின் இ-ஸ்டோரிலும் கிடைக்கிறது.

இதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இந்த போனை எளிமையாக திறப்பதற்கு வழிவகை செய்கிறது.

இதற்கு மாற்றாக, ‘பேஸ் வேக்’ தொழில்நுட்பமானது நீங்கள் ஸ்மார்ட்போனை எடுத்து உங்கள் முகத்தை காட்டிய சில நொடிகளில் திறக்கும் திறன் கொண்டதாகும்.

படிக்க வேண்டும்

spot_img