fbpx
Homeபிற செய்திகள்வறுமையால் மருத்துவர் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின இளைஞர் - படிப்பை தொடர உதவி கேட்டு...

வறுமையால் மருத்துவர் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின இளைஞர் – படிப்பை தொடர உதவி கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சி.மணிகண்டன். அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பணம் கட்ட முடியாமல், மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். அதன் பிறகே படிப்பை நிறுத்தி உள்ளார். பின்னர் மருத்துவ மாணவர் மணிகண்டன், டீக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சுற்றுலா சென்ற சக மாணவர்கள் அவரது நிலையைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

பின்னர் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்துள்ளார். சிறிது காலம், தந்தையுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். தற்போது தனியார் நிறுவனம் மூலம் செக்கியூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.

குடும்ப வறுமையே மருத்துவக் கல்வியை தொடர முடியாமல் போனதற்குக் காரணமாக உள்ளது. அவரது அம்மா யானை தாக்கி இறந்துவிட்டார்.

அம்மாவின் விருப்பப்படி, இவர் மீண்டும் மருத்துவப் படிப்பை தொடர விரும்புகிறார்.

கடந்த 22ம் தேதி அன்று தமிழக முதல்வர், மருத்துவத் துறைச் செயலாளர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குநர் போன்றவர் களுக்கும், மருத்துவப் படிப்பை தொடர உதவிடக் கோரி கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இவருடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் எல்லாம் மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். இவர் மட்டும் கூலித் தொழிலாளியாகிவிட்டார்.

தமிழக முதல்வர் அவர்கள் இம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவர் மருத்துவப் படிப்பை முடித்திட உதவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம் படைத்த நல்ல உள்ளங்கள் அனைவரும் உதவலாம் ஏழை மாணவனின் வண்ணகனவு நனவாகட்டும்.

இவர் சிறந்த மருத்துவராகி மலை மாவட்டத்தில் அவரது சொந்த ஊரில் பழங்குடி மக்களுக்கு சிறப்பான சேவை செய்யவேண்டும். இருப்பவர்கள் இணைந்து கை கொடுத்தால் இவரின் கனவு நனவாகுமல்லவா?

படிக்க வேண்டும்

spot_img