தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் புனித வளனார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் புதியதாக 53 அடி வெண்கல கொடிமரம் நிறுவப்பட்டது. இதை யொட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய கொடி மரம் அர்ச்சிப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஆயர் ஸ்டீபன் அந் தோணி ஆண்டகை புதிய கொடிமரத்தை அர்ச்சித்து திருப்பலி நிறைவேற்றினார்கள். 150 பிள்ளைகளுக்கு உறுதி பூசுதல் வழங்குதல் நடை பெற்றது.
விழாவில் மறைமாவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன், மறைமாவட்ட முதன்மை செயலர் அந் தோணி ஜெகதீஸ், அருட் தந்தையர்கள் சந்தீஸ்டன், விஜயன், ராபின், மரியதாஸ், ஜார்ஜ் மண்ணின் மைந்தர்கள் சவரிராஜ், பாலன், ஜேசுராஜ் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி மிக்கேல் லாரன்ஸ் மற்றும் சபையர் தாமஸ் ஸ்டோன்ஸ் சன் புனித வளனார் ஆலய பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர். இறை மக்கள் இக்கொடியேற்ற விழாவில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.