fbpx
Homeபிற செய்திகள்4667 மெ.வா. பசுமை மின்சக்தி வழங்க அதானி ஒப்பந்தம்

4667 மெ.வா. பசுமை மின்சக்தி வழங்க அதானி ஒப்பந்தம்

பல்வேறு துறைகளில் செயல்படும் அதானி குழுமத் தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான பிரிவாகவும் மற்றும் சூரியஒளி மின்சக்தி உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நிறுவனமுமான அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL), 4,667 மெ.வா. பசுமை மின்சக்தியை வழங்குவதற்காக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (SECI) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பேசுகையில், ‘SECI உடன் உலகின் மிகப்பெரிய PPA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செயல்பாட்டை விரைவாக்குவது மற்றும் சுயசார்பு பாரதம் செயல்திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது என்ற இந்தியாவின் இரட்டைக் குறிக்கோளை சாத்தியமாக்கும் எமது பயணத்தில் இது மற்றுமொரு முன்னேற்ற நடவடிக்கையாகும்.

COP 26 மாநாட்டின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, முன்பு எதிர் பார்க்கப்பட்டதைவிட விரைவாகவே குறைவான கார்பன் உமிழ்வு உள்ள பொருளாதாரத்திற்கு உலகம் மாறவேண்டும் என்பது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.

ஆகவேதான், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் US$50-$70 பில்லியன் முதலீட்டை இதில் செய்வதற்கு அதானி குழுமம் முடிவெடுத்திருக்கிறது.

2030 -ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக ஆவது என்ற எமது பொறுப்புறுதி மற்றும் இலக்கை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்க இந்த ஒப்பந்தம் துணை புரிகிறது’ என்றார். 4

667 மெ.வா. மின்சாரத்தை வழங்குவதற்கு AGEL-SECI – க்கு இடையிலான இவ்வொப்பந்தம், 2020 ஜூன் மாதத்தில் SECI-ல் AGEL -க்கு வழங்கப்பட்ட உற்பத்தியுடன் தொடர்புடைய சோலார் டெண்டரின் ஒரு பகுதியாகும்.

உலகளவில் இதுவரை வழங்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி உருவாக்கத்திற்கான டெண்டர் என்ற சாதனைப்பதிவை இதன்மூலம் இந்த ஒப்பந்தம் செய்திருக்கிறது.

2020-ல் டெண்டர் வழங்கப்பட்ட 8000 மெ.வா. திறனளவில், இதுவரை ஏறக்குறைய 6000 மெ. வா. என்பதற்கு மொத்த உற்பத்தி திறனளவிற்காக SEC உடன் மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் AGEL கையொப்பமிட்டிருக்கிறது.

அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் 2000 மெ.வா.-க்கான மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று AGEL எதிர்பார்க்கிறது.

படிக்க வேண்டும்

spot_img