Homeபிற செய்திகள்22டிபி சிஎம்ஆர் ஹார்டு டிரைவ் வெஸ்டர்ன் டிஜிட்டல் அறிமுகம்

22டிபி சிஎம்ஆர் ஹார்டு டிரைவ் வெஸ்டர்ன் டிஜிட்டல் அறிமுகம்

பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் துறையில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அறிமுகம் செய்து வரும் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் புதிய ‘அல்ட்ராஸ்டார் டிசி எச்சி570 22டிபி சிஎம்ஆர் ஹார்டு டிரைவ்’களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதன் தனித்துவமான ஆப்டிநந்த், பிஎம்ஆர், ஆர்மோர் கேச், ஹீலியோசீல் போன்ற தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம், இந்நி றுவனம் அதன் தொழில்நுட்பப்பிரிவில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் அதே நேரத்தில் கிளவுட் சேவைக்கான குறைந்த மொத்த உரிமைச் செலவை வழங்குவதால், இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

‘அல்ட்ராஸ்டார் டிசி எச்சி570’ ஹார்டு டிரைவை இந்நிறுவனம் இந்தியாவில் சரியான நேரத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது இந்தியாவில் டேட்டா மையங்களின் விரிவாக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக அதிகளவிலான டேட்டாக்களை பதிவு செய்ய இந்த ஹார்டு டிரைவ் உகந்ததாக இருக்கும்.

விரைவில் 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான டேட்டா, கிளவுட் சேமிப்பு ஆகியவற்றுக்கான பயன்பாடு என்பது மிக அதிக அளவில் இருக்கும். இந்த ஹார்டு டிரைவ்கள் இது போன்ற பணிகளுக்கு சிறந்த ஒன்றாக இருப்பதோடு, நிறுவனங்களின் மொத்த உரிமைச் செலவையும் வெகுவாக குறைக்கும்.

வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்தின் இந்தியாவிற்கான விற்பனை பிரிவு மூத்த இயக்குனர் காலித் வானி கூறுகையில், உலகின் முதல் 22TB CMR ஹார்டு டிரைவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவ தோடு, பல ஆண்டுகளாக டேட்டா மையங்கள் வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தை தொடர்ந்து ஆதரித்து வருகி றோம் என்றார்.

இந்நிறுவனத்தின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கான மார்க்கெட்டிங் மூத்த இயக்குனர் ஜெகநாதன் செல்லையா கூறுகையில், அறிமுகம் செய்துள்ள புதிய 22டிபி டிரைவ்கள், வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான டேட்டாவை திறம்படச் சேமிக்கவும் உதவும். அவர்களுக்கான செலவையும் வெகுவாக குறைக்கும் என்றார்.

22டிபி அல்ட்ராஸ்டார் டிசி எச்சி570 ஹார்டு டிரைவ் தற்போது ராஷி பெரிபரல்ஸ் மற்றும் டெக் டேட்டா இந்தியா ஆகிய நிறுவனங்களில் கிடைக் கிறது.

படிக்க வேண்டும்

spot_img