கோவை வடவள்ளியில் அமைந்துள்ள ஆனந்தாஸ் ஓட்டலில் உள்ள செந்தூர் வேலன் ஹாலில் வரும் 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேக்ஸ் வெல் அறக்கட்டளை துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆதரவாளர்களை கௌரவிக் கும் விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு சிறப்பு விருந் தினராக கோவை மாந கராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பங்கேற்று பேசுகிறார். விழாவில் காட்டூர் மகளிர் காவல் நிலைய ஆய் வாளர் பழனியம்மாள், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சண் முகம், கோவை நிழல் மையம் அறக்கட்டளை முருகன் மற்றும் பைரா வடக்கு கோட்ட தலைவர் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
சிறப்பு அழைப்பாளர் களாக துடியலூர் பகுதி திமுக செயலாளர் கே.அருள் குமார், மாநகராட்சி கவுன்சிலர் புஷ்பமணி அருள்குமார், தலைமை ஆசிரியர்கள் யசோதா ராமசாமி, பி.எஸ்.சாரதா, மதர் டிரஸ்ட் கௌசல்யா, பொதுநல மருத்துவர் வினி தா பிரியா, என்என்ஐ தலைவர் நபாஸ் செரிப், ஏசியன் ரூபிங் ஜெய்லானி, புதுயுகம் தொலைக்காட்சி சித்ரவேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, உறுப்பினர்களை அறிமுகப்படுத்துதல், பெண் கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஆதரவாளர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தல், இரத்ததானம் வழங்க தன்னார்வலர்களை சேக ரித்தல் ஆகிய நிகழச்சிகள் நடைபெறுகிறது.



