fbpx
Homeபிற செய்திகள்207 பேருக்கு ரூ.2.14 கோடி கடனுதவி அந்தியூர் எம்எல்ஏ வழங்கினார்

207 பேருக்கு ரூ.2.14 கோடி கடனுதவி அந்தியூர் எம்எல்ஏ வழங்கினார்

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நேற்று (செப்.30) சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் ரூ.2 கோடியே 14 இலட்சம் மதிப்பிலான கடன்களை வழங்கினார்.

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட கீழ்வாணி, குப்பாண்டாம்பாளையம், கொண்டையம்பாளையம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், முரளிசென்னம்பட்டி ஆகிய 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம், பயிர்க்கடன், சுய உதவிக் குழுக்கடன் மற்றும் மாற்றுத்திறனாளிக் கடன் போன்ற வகையான கடன்கள் 207 பேருக்கு ரூ.2 கோடியே 14 இலட்சம் அளவிற்கு கடன்கள் வழங்கினார்.

கோபி சரக துணைப்பதிவாளர் ப.கந்தராஜா வரவேற்றார். விழாவில் அந்தியூர் கூட்டுறவு சார்பதிவாளர் ப.சண்முகம், கோபி துணைப்பதிவாளர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் ஆர்.சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், இயக்குனர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img