பிஎஸ்இ பங்கு சந்தையில் பட்டிய லிடப்பட்டுள்ள டெபாசிட்டை ஏற்காத மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான அத்விக் கேபிடல் நிறுவனம் 2023-ம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நிதி ஆண்டு 2023-ன் 30 ஜூன், 2022-ல் முடிந்த முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 109.51 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை காட்டிலும் 0.72 கோடி அதிகம் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பொறுத் தவரை இது 150 மடங்காக உள் ளது. இந்த காலக்கட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபமும் நேர்மறை யாக உள்ளது.
இது கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 0.11 லட்சம் நஷ்டத்தில் இருந்து தற்போது நடப்புநிதி ஆண் டின் முதல் காலாண்டில் 92.66 லட் சம் லாபம் ஈட்டியுள்ளது.ஒருங்கிணைந்த நிதி நிலையை பொறுத்தவரை மொத்த வரு மானம் கடந்த நிதி ஆண்டின் 4வது காலாண்டில் 34.12 கோடி ரூபாயிலிருந்து நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 109.51 கோடி ரூபாயாக உள்ளது.
நிகர லாபத்தைப் பொறுத்தவரை கடந்த நிதி ஆண்டின் 4வது காலாண்டில் 0.18 கோடியாக இருந்தது தற்போது நடப்புநிதி ஆண் டின் முதல் காலாண்டில் 0.95 கோடியாக உள்ளது.இந்நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நிதி முதலீடு, நிறுவனங்களுக்கு கடன் மற்றும் முன்பணம் மூலம் நிதி அளித்தல் மற்றும் அனைத்து வகையான குத்தகை நடவடிக் கைகளுக்கு நிதிஅளித்தல், குத்தகை வணிகத்தை மேற்கொள்ளுதல், வாங் குதல், விற்பனைசெய்தல்அல்லது வாடகைக்கு விடுதல் அல்லது அனைத்து வகையான தொழிற்சாலை மற்றும் எந்திரங்களுக்கு கடன் உதவி அளித்தல் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் தனிநபர் கடன்கள் மற்றும் முத லீடுகளில் அதிக வருமானம் கிடை க்கும் சிறு நிதி உதவி பிரிவுகள் உள் ளிட்டவைகளிலும் அதிக கவனம் செலுத்துகிறது.



