fbpx
Homeபிற செய்திகள்200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: முதல்வர் விஜய்க்கு திருப்பூர் மாவட்ட பயனாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: முதல்வர் விஜய்க்கு திருப்பூர் மாவட்ட பயனாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி





திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மின் நுகர்வோ£ர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.
–திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மே 10 முதல் மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
முதலமைச்சர் விஜய், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங் களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும். பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டு. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும் என மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்கள்.
அதன்படி, 10.05.2026 முதல் இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வால் ஏற்படும் சுமையை குறைப்பதற்கும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்கும், குடும்ப மின் நுகர்வோருக்கு இருமாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தகுதி சரிபார்ப்பு, மானியக் கணக்கீட்டு முறை, மின்கட்டண உருவாக்கம் மற்றும் கணக்கியல்/அறிக்கை தொடர்பான அம்சங்களில் தேவையான மாற்றங்கள் பில்லிங் மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி, சந்தைப்பேட்டை டி.என்.சி.காலனி பகுதியை சேர்ந்த திருமதி. ராஜாத்தி அவர்கள் தெரிவித்ததாவது:


என் பெயர் ராஜாத்தி. நான் திருப்பூர் மாநகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 59 வயதாகிறது. எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நான் இப்பகுதியில் நீண்ட வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். என் வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறேன். எனது குடும்பத்தின் அன்றாட செலவுகளை ஏழ்மையான சூழ்நிலையிலும் சமாளித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது வாழ்க்கைச் செலவு உயர்வால் ஏற்படும் சுமையை குறைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் இருமாதத்திற்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் எங்களை போன்ற குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இத்திட்டத்தினை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் பணி சிறக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி, சந்தைப்பேட்டை டி.என்.சி. காலனி பகுதியை சேர்ந்த மகேஷ்வரி தெரிவித்ததாவது:


என் பெயர் மகேஸ்வரி. நான் திருப்பூர் மாநகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 45 வயதாகிறது. எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நான் இப்பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.
நான் தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். எங்களது குழந்தைகள் கல்விச் செலவு மற்றும் குடும்ப அத்தியாவசியச் செலவுகளை சமாளித்து வரும் சூழ்நிலையில் வீட்டு மின்சார கட்டணம் கூடுதல் சுமையாக இருந்தது.
இந்த நிலையில் எங்களது வாழ்க்கைச் செலவு உயர்வால் ஏற்படும் சுமையை குறைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் மின் கட்டண செலவு வேறு அடிப்படை தேவைக்கு பயன்படும்.
இத்திட்டத்தின் மூலம் எங்களை போன்ற பொருளாதாரரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இத்திட்டத்தினை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img