Homeபிற செய்திகள்2 புதிய பூச்சிக்கொல்லி மருந்து சல்பர் மில்ஸ் நிறுவனம் அறிமுகம்

2 புதிய பூச்சிக்கொல்லி மருந்து சல்பர் மில்ஸ் நிறுவனம் அறிமுகம்

சல்பர் மில்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது “இமாரா”. இது உலகின்முதல் டபிள்யு ஜி வடிவிலானபூச்சிக்கொல்லி மருந்தும், சத்துக்களும் கொண்ட ஒரு தயாரிப்பு. யமஹா நெல்லின் அதிக சேதம் ஏற்படுத்தும் மஞ்சள் தண்டு துளைப்பானை திறம்பட கட்டுப்படுத்தும்.

சேலத்தில் நிறுவன இயக்குனர் சுகேசு, நிறுவனத் தலைவர் அக்காணி, தெற்கு மண்டல மேலாளர் சிவபிரசாத் மற்றும் தமிழ்நாடு மேலாளர் குமரேசன் முன்னிலையில் இமாரா அறிமு கப்படுத்தப்பட்டது.

இது முற்றிலும் தனித்துவமான ஒரு தயாரிப்பு. ஏனெனில், இதிலுள்ள செயலற்ற பகுதி பொருளானது 70 % சல்பர் மற்றும் 13% ஜிங்க் ஆக்சைடு கொண்ட பூச்சி மருந்தாக உரு வாக்கப்பட்டுள்ளது. சத்துக்களாக மாற்றப்பட்டதால் இது பயிருக்கு தீங்கு விளைவிக்காது.

பயிருக்கு தேவையான சத்துக்களை வழங்கி விடுகிறது. இதுமட்டுமில்லாமல் மண்ணின் வளத்திற்கு உறுது ணையாக உள்ளது. ஆகையால் “இமாரா” பலன்கள் அதிகம் கொண்டது.

இமாரா டபிள்யு ஜீ தயா ரிப்பு என்பதால் இதனை பயன்ப டுத்துவது எளிது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ என்ற அளவில் நடவு செய்த 15-20நாட்களுக்கு பின்னரும், நேரடி விதைப்பு செய்த 25-30 நாட்களுக்கு பின்னரும் பயன்படுத்த வேண்டும். இதனை மணல் அல்லது உரத்துடன் கலந்து சீராக பயன்படுத்த வேண்டும்.

நெல்லின் ஆரம்ப தூர்கட்டும் பருவம் மிக முக்கி யமானது. மஞ்சள் தண்டு உழைப்புக்கு எதிராக சிறப்பாக செயல்படவும், சத்துக்களை வழங்கும் இமாராவை சரியான பரிந்துரைக்கப்பட்ட கால அள வில் பயன்படுத்துதல் அவசியம்.
இமாரா உலகின் முதல் பூச்சி மருந்து சத்துக்களுடன் கலந்து ஓர் தயாரிப்பாக உள்ளதால், விவசாயிகளின் முதல் தேர்வாக அமையும்.

இதனை2-10-300/ஏக்கர் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் நெல்லின் குருத்துப்புழு கட்டுப்படுத்தப்படுகிறது.
சல்பர் மில்ஸ் நிறுவனத்தின் உயர் தொழில்நுட்ப கலவை இயக்கத்தின் முன்னோடி.

கடந்த 50 ஆண்டு காலமாக 85 நாடுகளில் சேவை செய்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு இணக்கமான உயர் தரத்துடன் உயிரின் உகந்த கலவை ஆக்கங்களை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img