fbpx
Homeபிற செய்திகள்2 டன் புகையிலை பறிமுதல்: 8 பேர் கைது

2 டன் புகையிலை பறிமுதல்: 8 பேர் கைது

சூலூர் அருகே 2 டன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர். வெளிமாநிலத்தில் இருந்து சூலூருக்கு புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக சூலூர் போலீசாருக்கு வியாழக் கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை மேற் கொண்டனர். அப்போது அதில் 1 டன் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மகபூப் பாஷா (30), செந்தில்குமார் (47), செந்தில்ராஜா (44), ஜெயபிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்க ளிடமிருந்த 1 டன் புகையிலைப் பொருள்கள், ரூ.20 லட்சம் ரொக்கம், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மயிலம்பட்டி கிராமத்தில் புகையிலைப் பொருள் கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத் படேல் (26), அமரா ராம் (22), கோபால் (22), மைபால் (22) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1 டன் புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவற்றை போலீசார் பறி முதல் செய்தனர்.

ஒரே நாளில் 2 டன் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீசாரை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் பாராட்டினர்.

போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல்களை 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img