fbpx
Homeபிற செய்திகள்14,216 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.99 கோடியில் நலத்திட்ட உதவிகள்

14,216 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.99 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 07-05-2021 முதல் இதுவரை, மொத்தம் 14,216 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,99,16,417 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அனைத்து வகையிலும் வலுப்பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களையும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திட்டங்கள் எவை, எவை?
மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித் தொகை, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கான பராமரிப்பு உதவித் தொகை, சுய வேலை வாய்ப்பு (வங்கிக் கடன்), மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச் சலுகை, அரசுப் பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவசப் பேருந்து பயணச் சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம் முடநீக்கு சாதனம் (காலிபர்), பார்வையற்றவருக்கான திருமண உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கை, கால் பாதிக்கப்பட்டவர், காது கேளாத பேச்சு குறைபாடுள்ள நபர், பார்வையற்றவர் ஆகிய மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்ட பட்டதாரி அல்லாத மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம், பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. சட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சட்டப் புத்தகம் வாங்க ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மேற்குறிப்பிட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகளை பெற மாற்றுத்திறனாளிகள் 40 சதவீதத்திற்கு மேல் மாற்றுத்திறன் உடையவர்களாக இருந்தால், தேசிய அடையாள அட்டைகளும், மன வளர்ச்சி குன்றியோருக்கும், தசைத்சதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாதந்தோறும் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1,500-ம் பெற தகுதியுடையவர் ஆவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 07-05-2021 முதல் இதுவரை 730 பயனாளிகளுக்கு ரூ.25,74,000 மதிப்பிலான கல்வி உதவித் தொகையும், 11 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 மதிப்பிலான திருமண உதவித் தொகையும், 12065 பயனாளிகளுக்கு ரூ.24,25,02,463 மதிப்பிலான மாதாந்திர உதவித் தொகையும், 78 பயனாளிகளுக்கு ரூ.4,07,784 மதிப்பிலான தையல் இயந்திரமும், 1059 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 50 பயனாளிகளுக்கு ரூ.3,05,800 மதிப்பிலான செவித்திறன் கருவியும், 40 பயனாளிகளுக்கு ரூ.30,60,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 10 பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு ரூ.3,42,720 மதிப்பிலான பிரெய்லி ரீடரும், 20 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1,89,500 மதிப்பிலான நாற்காலியும், பயனாளிகளுக்கு தாங்கிகளும்,

153 பயனாளிகளுக்கு ரூ.84,150 மதிப்பிலான கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் ஆக மொத்தம் 14,216 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,99,16,417 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரம் உயர வழி வகை செய்து, அவர்களது வாழ்வில் தமிழக முதல்வரால் ஒளி ஏற்றப்பட் டுள்ளது.

சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 04-04-2022 முதல் 08-04-2022 வரை நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதனடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் பாபநாசம் மேலணை காணி பகுதியில் உள்ள பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற முகாமில், காணி இன மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக விண்ணப்பித் திருந்த தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மின் கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.106,000 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

நடமாட உதவும்
சக்கர நாற்காலி
மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி பெற்ற மாற்றுத்திறனாளி செந்தில்குமார் தெரிவித்ததாவது:

நான் திருநெல்வேலி மாவட்டம் அம்பை தாலுகா, காரையார் பகுதியில் உள்ள காணி குடியிருப்பில் வசித்து வரும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவன். என் வயது 41. முதுகுத் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டு, இருந்த இடத்தை விட்டு அசைய முடியாத நிலையில் இருந்து வருகிறேன்.

பிறரின் உதவியில்லாமல் அருகில் கூட நகர்ந்து செல்ல முடியாத நிலையில் இருந்தேன். மின்கலத்தால் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கேட்டு, கடந்த வாரம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தேன்.

எனது கோரிக்கையினை உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு பரிசீலனை செய்ததின் அடிப்படையில் ஒரு வார காலத்திலே எனக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பிலான மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இதன் மூலம் எனது சொந்தப் பணியினை யாருடைய உதவியும் இல்லாமல் செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

எனது கோரிக்கையினை ஏற்று மின்கல சக்கர நாற்காலி வழங்கி உதவிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு:
இரா. ஜெய அருள்பதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருநெல்வேலி.

படிக்க வேண்டும்

spot_img