Homeபிற செய்திகள்சுகாதார மையங்களில் நடப்படும் 1,200 மரக்கன்றுகள்

சுகாதார மையங்களில் நடப்படும் 1,200 மரக்கன்றுகள்

பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் ‘நலசோலை’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 1,200 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.


சோமையம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் தவெங்கடேச பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டும்பணியை தொடங்கி வைத்தனர்.


மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார வட்டாரங்களில், பொதுமக்களுக்கு தூய்மையான காற்று மற்றும் பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
தொடர்ந்து அவற்றை சுகாதாரத் துறை பராமரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img