பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களில், மிகத்தரமான தானிய விளைச்சலின் அளவை அதி கரிப்பதோடு, தமிழகத்தில் உள்ள நெல் விவசாயிகளுக்கு மேம்பட்ட உற்பத்தித் திறன் செயல் திறன் செயல்பாட்டை எளிமையை அளிக்க இருக்கிறது ஸ்வராஜின் அறுவடை இயந்திரமான ஸ்வராஜ் புரோ கம்பைன் 7060.
நெல் வெட்டுவதற்கான புதிய வெட்டுக் கம்பி பொருத்தப்பட்ட ,புதிய ஸ்வராஜ் புரோகம்பைன் 7060 ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த விலையில், முற்றிய நெற்பயிரைத் தொடர்ச்சியாகத் திறம்பட வெட்டும் திறன் கொண்டது.
நெல் மற்றும் சோயாபீனை திறம்பட அறுவடை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஸ்வராஜின் இந்த புதிய கம்பைன் ஹார்வெஸ்டர் மிகக்குறைவான தானிய இழப்பு மற்றும் சேதாரத்துடன் அறுவடையை, களை நீக்குதலை, கதிரடித் தலைத் திறம்படச் செயல்படுத்துகிறது.
கரடு முரடான ஆற்றல் மிக்க எரிபொருள் திறன் மிக்க வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்வராஜ்ப்ரே £கம்பைன் 7060 நம்பகமானது. ஒரு 72ஹெச்பிஅட் 2300ஆர்பிஎம் இன்ஜின் பொருத்தப்பட்டது
இது பற்றி எம் அண்டு எம் நிறுவனத்தின் ஸ்வராஜ் பிரிவுக்கான தலைமை நிர்வாக அலுவலர் ஹரிஷ்சவான் பேசு கையில், முழுமையான கள விற்பனை சேவை மற்றும் முக்கியமான நேரத்தில் உதிரிபாக உதவிகள் போன்றவற்றை அளிக்க இருக்கிறோம்.
குறைவானக ழிவு மற்றும் செயல்பாட்டு நேரத்தினால் விவசாயிகளுக்குப் பெருமளவு வருமா னத்தை உறுதி செய்யும் வகையில், எங்களது புதிய தயாரிப்பு அதிகபட்ச செயல்திறன், தரம் மற்றும் அறுவடையை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மிகப்பரந்த அளவிலான ஸ்வராஜின் சில்லறை விற்பனை மற்றும் சேவை, நெட்வொர்க் வழியாக ஸ்வராஜ் புரோ கம்பைன் 7060 விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன.
கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் ஹார்வெஸ்டரை பல்வேறு வங்கிகள்மற்றும்நிதிநிறுவனங்களில்இருந்து கிடைக்கும் நிதியுதவி மூலம் வாங்கலாம்.
ஈரமான, மிதமான வயல் வெளிக்கு ஏற்ற ஸ்வராஜ் புரோ கம்பைன் 7060 ஒரிஸா, மேற்குவங்காளம், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானாவிலும் கிடைக்கும்.



