புதுதில்லியில் உள்ள இந்தியன் சொசைட்டி பார்டெக்னிக்கல் எஜுகேஷன் அமைப்பால், மாநில அளவிலான சிறந்த மாணவர், மாணவியர் விருது, சிறந்த ப்ராஜெக்ட் விருது மற்றும் சிறந்த ஆசிரிய- ஆலோசகர் விருது ஆகிய மூன்று விருதுகளை, துடியலூர் அருகே வட்ட மலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கி உள்ளது.
இந்திய தொழில் நுட்பக் கல்விக்கான அமைப்பு (ஐ.எஸ்.டி.இ) ஆசிரியர்களின் பணி மேம்பாடு, மாணவர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில் நுட்பகல்வி முறையின் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது.
மாணவர்களின் கல்வி மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளில் முழுமையான செயல்திறனின் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு (ஐ.எஸ்.டி.இ) அமைப்பின் மாநில அளவிலான சிறந்த மாணவர் விருதினை இவ் வமைப்பு வழங்குகிறது..
2020-ம் ஆண்டிற்கான ஐ.எஸ்.டி.இ. அமைப்பின் சிறந்த மாணவர் விருதை இக்கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர் எம்.வருண் மற்றும் இறுதி ஆண்டு சிவில் இன் ஜினியரிங் துறை மாணவி எஸ்.எம்ஷ்ருதி ஆகியோர் இவ்விருதினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவிகள் ஜெ.செரினா கிளாரிட்டா, எஸ்.டாரத்தி, எஸ்.நர்மதா, யு.வாசுகி, இந்துமதி ஆகியோர் “போஸ்ட் கோவிட் வெப்பநிலை அளவீட்டு வருகைபதிவு” என்ற தலைப்பில் நடைபெற்ற ப்ராஜெக்ட் போட்டியில் வெற்றி பெற்றனர்.
2020 ஆண்டிற்கான (ஐ.எஸ்.டி.இ) மாநி லஅளவிலான சிறந்த மாணவர் அமைப்பு -ஆசிரிய ஆலோசகர் விருது இக்கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினி யரிங் துறைத் தலைவர் ஆர்.வனிதாவுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
விருதுபெற்ற அனைவரையும் எஸ்என்ஆர்சன்ஸ் அறக் கட்டளை நிர்வாக அறங் காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி, கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என்.உமா, துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரி வித்தனர்



