ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கீழ் செயல்பட்டு வரும் காலேஜ் ஆப் பார்மசியின் 29-வது பட்டமளிப்பு விழா, எஸ்.என்.ஆர்.கலை அரங்கில் நடந்தது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயண சுவாமி தலைமை தாங்கி பேசினார்.
தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவரும் டெல்வின் பார்முலேஷன் நிறுவனத்தின் இயக் குநருமான ஜே.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.
250-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டங் கள் வழங்கப்பட்டன.
தனமணி, சங்கீதா, ஜெகநாத் ஆகியோர் தங் களுடைய முனைவர் பட் டங்களை பெற்றனர்.
கீர்த்தி, நித்தியா ராம்தாஸ் ஆகியோருக்கு கல்லூரியின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.மாண வர்கள் நிமிதா ட்ரீசா, கெசியா அண்பாபு, எபின் சிபி, ட்ரிஸ்ல் எம்.பாபு, ட்ரெசா தாமஸ், விஷ் ணூஜா விஸ்வநாத் ஆகியோர் அவரவர் துறையில், கல்வியாண்டில் ஒட்டுமொத்த தரவரிசை யில் முதல் இடம் பெற்ற னர்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் “பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடென்ட்” விருதும் மாணவர்களுக்கு வழங் கப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே. ரவி வர வேற்றார்.
துணை முதல்வர் டாக் டர் கோபால்ராவ் நன்றி கூறினார்.



