கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் 4-வது அலகு தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நேற்று (டிச.3) நடைபெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) முனைவர் ஆர்.அண்ணாதுரை, ‘நாட்டு நலப்பணித் திட்டமாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசியதாவது:
‘உலக நாடுகளை ஒப்பிடு கையில் இந்திய மாணவர்கள் எழுச் சிமிக்கவர்கள். அவர்களுடைய எண்ணங்களை அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது. ஆனால் நாட்டுநலப்பணித் திட் டம் என்ற இந்த அமைப்பின் மூல மாக அதை நிச்சயம் பெற்றுவிட முடியும்.
அறியாமை, துன்பம், நோய் ஆகியவற்றில் இருந்து விடுபடச் செய்வது கல்வி. அதேபோல் நாட்டுப்பற்று, பிறருக்குத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை அளிப்பது இந்த நாட்டு நலப்பணித் திட்டமாகும். மற்றவர்களிடம் இருந்து ஊக்குவிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நாட்டுநலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா பேசிய தாவது:
‘வாழ்க்கையில் எப்போதும் முன்னுக்குச் செல்ல வேண்டும்.
பின்னுக்குச் செல்லக் கூடாது. நமக்கு எதுக்கு நாட்டுநலப்பணித் திட்டம்? என்றால் ஒருவருக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இங்கு தான் வளர்க்கப்படு கின்றன.
எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றுகின்றனர். எண்ணெய், திரி, தீ ஆகியவை இணைந்து ஜோதியாகப் பிரகாசிக்கிறது. எண்ணெய், திரி, தீ என்பதற்குள் ‘என்னைத் திருத்தி’ என்ற தத்துவம் அடங்கியுள்ளது.
நாட்டுநலப்பணித் திட்டம் என்பது உலகத்தையோ, ஊரையோ திருத்து வது அல்ல. தன்னைத் திருத்திக் கொள்வதாகும். ஆளுமைத் திறனையும், தனித்திறமைகளையும், தலைமைப் பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும்.
ஒருநாள் வாழும் ஈசல் வெளிச்சத்தை நோக்கிச் செல்லும்போது, பல ஆண்டுகள் உயிர்வாழும் நாம் ஏன் வெளிச்சத்தை நோக்கிச் செல்லக் கூடாது. மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது.
நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல, நானின்றி அமையாது உலகு என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுயமுன்னேற்றமே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும்.
நாம் எப்போதும் விழிப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந் தால் நம்முடைய வெற்றியை யாரா லும் தடுக்க முடியாது’ என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் 4-வது அலகு தொடங்கப்பட்டதற்கான ஆணையை தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகளின் நாட்டுநலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் முனைவர் சி.சாமுவேல் செல்லையா, முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக் குமாரிடம் வழங்கினார். சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆர்.நாகராஜன், ஏ.சுபாஷினி, ஜெ.தீபக்குமார், ரெட்ரிப்பன் கிளப் அலுவலர் கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



