fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபின் கோவையில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபின் கோவையில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்த பிறகு, உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தெரி வித்தார்.

கோவையில், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், காந்திபுரத் தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு விடுதி ஆகிய இடங்களில் நேற்று (டிச.3) சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந் தன் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது: சுற்றுலா, சமுதாய வளர்ச்சிக்கு ஓர் உந்துகோலாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகவும் திகழ்கிறது.

குளங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையிலும், மனதிற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும், ஓய்வையும், கேளிக்கையையும் மற்றும் புதிய அனுபவங்களையும் அளிக்கும் வகையில், சுற்றுலா கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபட உள்ளன.

படகு வசதி
சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில், வாலாங்கு ளம், உக்கடம் பெரியகுளம் ஆகிய வற்றில் படகு வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாலாங் குளம், உக்கடம் பெரியகுளம் ஆகியவற்றில் படகு வசதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடைந்தபின், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்த பிறகு, சுற்றுலாத்துறையை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஆன்லைனில்
உணவு ஆர்டர்
ஹோட்டல் தமிழ்நாடு விடுதியை மேம்படுத்தும் பணி கள் நடைபெற்று வருகின் றன. விரைவில் பணிகள் முடிவடையும்.

கொரோனா தொற்று காரணமாக, ஹோட்டல் தமிழ் நாடு-இல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய முடியும். இத்திட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.22 இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இந்தியாவிலே முதன்முறை நம் மாநிலத்தின் சார்பாக மெக்சிகோ நாட்டில் நடை பெற்ற ஹாட் ஏர் பலூன் திருவிழாவில் Hot Air Balloon Festival) நான், சுற்றுலாத்துறை அரசு செயலாளர் கலந்து கொண்டோம்.

இதே போன்று ஹாட் ஏர் பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

ஆய்வின்போது, சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்று லாத்துறை நிர்வாக இயக்குநர் சந்திப்நந்தூரி, மாவட்ட ஆட்யர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img