fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் நலஉதவிகள் வழங்கியது

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் நலஉதவிகள் வழங்கியது

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஈரோடு மாவட்டம் திருவாச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், துடுப்பதி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலையில் அங்கு வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சமூக சேவகி இந்திராசுந்தரம் நேரில் சென்று வழங்கினார்.

இந்நிகழ்வில் சுரேஷ், திவ்யா, மதுமதி, கார்த்தி, மோகன், சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img