fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீசத்குரு மெட்ரிக் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்கம்

ஸ்ரீசத்குரு மெட்ரிக் பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் துவக்கம்

ஸ்ரீ சத்குரு மெட்ரிகுலேஷன் பள்ளியில், கோவை ரோட்டரி இண்டஸ்டிரியல் சிட்டி ஆதரவுடன், இன்ட்ராக்ட் கிளப் துவக்கப்பட்டது.

இன்ட்ராக்ட் கிளப் என்பது ரோட்டரி இன்டர்நேஷனலின் மாணவர்கள் பிரிவான ஒரு சர்வதேச அமைப்பு. உலகம் முழுவதும் சுமார் 16,000 கிளப் கள் உள்ளன. கோவை ஆர்ஐ3201 மாவட்டத்தில் இது 56-வது கிளப் ஆகும்.

மாணவர் தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்றனர். அவர்கள், பசுமைபூமி, தூய்மையாக இருங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.

ரோட்டரி தொழில்நகரத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். பட்டயத் தலைவர் வழக்கறிஞர் பி.ஏ.பிரபு சங்கர், மாணவர்களுக்கு வழிகாட்டினார்.

தலைமை விருந்தினராக பாலகிருஷ்ணன், உதவி கவர்னரும், மாவட்ட தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் பொன்ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

சரவணன், கனகராஜ், வேல்முருகன், அருண்பிரசாத், சஃபி, டாக்டர் உமாபிரபு ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img