fbpx
Homeபிற செய்திகள்‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் வெற்றி

‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டி ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் வெற்றி

தேசிய அளவிலான “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத் தான்” போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாண வர் வெற்றி பெற்றார்.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தேசிய அளவிலான இணையவழி ஜூனியர் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதன் முடிவுகள் கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தகவல் தொழில்நுட்பத்துறை முதலாமாண்டு மாணவர் ஜெ.ஜான் சாமுவேல், “ஸ்மார்ட் ஷாப்பிங் கார்ட்” என்ற தலைப்பிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து கோவையில் நடைபெற்ற விழாவில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, மாணவர் ஜெ. ஜான் சாமுவேலுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசு வழங்கினார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் என்.சுமதி ஆகி யோர் மாணவருக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img