கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நேற்று (ஜூலை 1) பொன்விழா நிறுவன நாள் மற்றும் தொலைநிலைக்கல்வி பட்டத்தகுதி பெறும் விழா பல்கலை. வளாகத்தில் நடந்தது.
வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதை உருவாக்கிய சிற்பிகளை நினைவு கூரும் வகையிலும், பல் கலைக்கழகத்தின் சாதனைகளை அங்கீகரிக்கவும், காலம் வயது வரம்பின்றி அறிவியல் சார்ந்த வேளாண் கல்வியை கற்ற வேளாண் ஆர்வலர்களுக்கு பட்ட மளிக்கவும் இந்த விழா நடந்தது.
விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் பொது இயக்குநர் மற்றும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் ஆலோசகராக பணியாற்றும் முனைவர் இலஷ்மண் சிங் ரத்தோர் நிறுவன நாள் உரையாற்றி, சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார்.
நூற்றிபதினாறு ஆண்டு கால பாரம்பரியமிக்க நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களும், மூத்த அறிஞர்களும் எடுத்துரைத்தனர்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ் ணன், வாழ்த்துரை வழங்கினார்.
வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் பல வியத்தகு சாதனைகளை புரிந்த வேளாண் அறிஞர்களுக்கு விருதுகளும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வியில் பயின்ற பட்டதாரிகளுக்கு பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இப்பல்கலைக்கழகத்திற்காக பல்லாண்டு கால சேவை புரிந்தோருக்கு, வாழ்நாள் சாதனை யாளர் விருதுகள் வழங்கப்பட்டன.இப்பல்கலைக்கழகத்தின் மூத்த அறிவுடையோர்களும், பெரியோர்களும் கௌரவிக்கப்பட் டனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி வரவேற் புரையில், பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் முனைவர் ஆர்.தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.



