fbpx
Homeபிற செய்திகள்வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கோவை கருமத்தம்பட்டி தனியொரு பகுதியில் வசித்து வருபவர் மாரப்பன் என்பவரின் மகன் ஜீவா( 25) .இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்காக சென்று விட்டார் .மீண்டும் மதியம் உணவிற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட இருந்தது .

இதுகுறித்து ஜீவா கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேரவில்லை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img