fbpx
Homeபிற செய்திகள்வாடகைக்குக் கொடுத்த காரை அடகு வைத்தவர்கள் மீது வழக்கு

வாடகைக்குக் கொடுத்த காரை அடகு வைத்தவர்கள் மீது வழக்கு

கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் சரவணன். இவர் கார்களை வாடகைக்கு விட்டு வரும் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் இருகூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அப்போது கார்த்திக் சரவணனிடம் இருந்து கார் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்கு பேசி எடுத்துச் சென்றார். ஆனால் எடுத்துச் சென்றது முதல் வாடகை தரவில்லை. இது குறித்து சரவணன் கார்த்திக்கிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்பவர் கார்த்திக் என்பவர் உங்களது காரை எங்களிடம் அடகு வைத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் என்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தால் காரை திருப்பி தருவதாக கூறியிருக்கிறார் .இதை அடுத்து சரவணன் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் இருகூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தவ்பிக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img