கோவை ராம்நகர் காளிதாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்பவரின் மகன் சிவகுமார்( 53).
இவர் நேற்று மதியம் ராம்நகர் ஐசிஐசிஐ வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சிவகுமாரின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து சிவக்குமார் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.



