fbpx
Homeபிற செய்திகள்விவோ டி1 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ டி1 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம், ‘டி’ மாடல் வரிசை யில் தனது புதிய முதல் ‘டி1 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறையினருக்கும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கும் ஏற்ற வகையில் அதிக செயல்திறனுடன் நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஸ்நாப்டிராகன் 695 5ஜி மொபைல் தளத்தில் 6என்எம் சிப்செட் மற்றும் 8.25மி.மீ. தடிமனில் 2.5டி பிளாட் பிரேமில் வெளி வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் AnTuTu
4,00,000+ ஸ்கோரை வழங்குகிறது. இது 120 ஹெர்ட்ஸ் உயர் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது.

ஸ்டார்லைட் பிளாக், ரெயின்போ பேன்டசி ஆகிய 2 வித நிறங்களில் பிளிப்கார்ட், shop.vivo.com ஆகிய இணையதளங்களிலும் இந்தியா முழுவதும் உள்ள ஸ்டோர்களிலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 15,990 ரூபாய்க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 16,990 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 19,990 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

இது 5000எம்ஏஎச் பேட்டரியுடன் 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் வசதியைக் கொண்டுள்ளது. இதில் ரிவர்ஸ் சார்ஜிங்கை வசதியும் உள்ளது. இது ஒரு பவர் பேங்காக செயல்படவும் அனுமதிக்கிறது.

விவோ இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக இயக்குனர் பங்கஜ் காந்தி கூறியதாவது:
இளம் மற்றும் டிஜிட்டல் துறையில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பான செயல்திறன் கொண்ட டி மாடல் பிரிவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த ஸ்மார்ட்போன் டர்போ வேகத்துடன் கூடிய பல பரிமாண செயல்திறனுடன் பயனர் அனுபவத்தை உயர்த்தும். அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட எங்களின புதிய டி1 5ஜி ஸ்மார்ட்போன், ஸ்நாப்டிராகன் 695 மொபைல் இயங்குதளத்துடன் கூடிய வேகமான செயல்திறன்மிக்கதாக இருப்பதோடு 20 ஆயிரம் ரூபாய் பிரிவில் வெளிவரும் மிகவும் மெலிதான வடிவமைப்பு 5ஜி தொழில்நுட்படம் ஆகிய வற்றை உள்ளடக்கியதாகும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img