தேனி மாவட்டத்தில் இது வரை, 1,522 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.1,54,15,750 மதிப்பிலும், 1,874 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,21,67,600 மதிப்பீட்டிலும், 148 ஓட்டுநர்களுக்கு ரூ.15,12,950 மதிப்பீட்டிலும், மொத்தம் 3,544 தொழிலாளர்களுக்கு ரூ.3,90,96,300 மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் முத்தமிழ் கலைஞர் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் பொருட்டு 17-03-1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கென சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் கட்டுமானம், உடலுழைப்பு, ஓட்டுநர்கள், சலவை, முடிதிருத்துவோர், தையல், கைவினை, பனைமரம், கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு, காலணி மற்றும் தோல், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டம், வீட்டுப் பணியாளர், விசைத்தறி, பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சமையல் உள்ளிட்டவற்றிற்கென, தனியாக தமிழ்நாடு தொழிலாளர்கள் நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு வகையான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் அரசின் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வந்தார்.
அதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் பொருட்டு, தொழிலாளர்களின் நலன் காக்கின்ற வகையில், தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் கடந்த 30.07.2021 அன்று 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.34.78 கோடி மதிப்பிலும், 30.11.2021 அன்று 50,721 தொழிலாளர்களுக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான மகப்பேறு நிதியுதவி, இயற்கை மரண நிவாரணத் தொகை, விபத்து மரண நிவாரணத் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, திருமண நிதியுதவி, கல்வி உதவித் தொகை கண்கண்ணாடிக்கான உதவித் தொகை, மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அன்றைய தினமே நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 37,654 தொழிலாளர்கள், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் 41,515 தொழிலாளர்கள், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் 3,900 தொழிலாளர்கள் என மொத்தம் 83,702 தொழிலா ளர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் தற்போது வரை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியங் கள் மூலம் கல்வி, மகப்பேறு நிதியுதவி, இயற்கை மரண உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண்கண்ணாடிக்கான உதவித் தொகை, மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 181 கட்டுமானத் தொழிலாளர் களுக்கு ரூ.19,28,250 மதிப்பீட் டிலும், 413 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.49,26,250 மதிப்பீட்டிலும், 36 ஓட்டுநர்களுக்கு ரூ.3,78,300 மதிப்பீட்டிலும் மொத்தம் 630 தொழிலாளர்களுக்கு ரூ. 72,32,800 மதிப்பீட்டிலும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 761 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.77,07,500 மதிப்பீட்டிலும், 800 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.98,52,250 மதிப்பீட்டிலும், 40 ஓட்டுநர்களுக்கு ரூ.3,78,350 மதிப்பீட்டிலும் மொத்தம் 1601 தொழிலாளர்களுக்கு ரூ.1,79,38,100 மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 200 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.19,26,500 மதிப்பிலும், 111 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.24,63,100 மதிப்பீட்டிலும், 29 ஓட்டுநர்களுக்கு 3,00,000 மதிப்பீட்டிலும், மொத்தம் 340 தொழிலாளர்களுக்கு 46,89,600 மதிப்பீட்டிலும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 380 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.38,53,500 மதிப்பீட்டிலும், 550 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.49,26,000 மதிப்பீட்டிலும், 43 ஓட்டுநர்களுக்கு ரூ.4,56,300 மதிப்பீட்டிலும் மொத்தம் 973 பேருக்கு ரூ.92,35,800 மதிப்பீட்டிலும் மொத்தம் 1,522 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.1,54,15,750 மதிப்பிலும், 1,874 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,21,67,600 மதிப்பீட்டிலும், 148 ஓட்டுநர்களுக்கு ரூ.15,12,950 மதிப்பீட்டிலும், மொத்தம் 3,544 தொழிலாளர்களுக்கு ரூ.3,90,96,300 மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்த தொழிலாளர்கள் தாங்கள் பெற்ற பயன்களை அகமகிழ்வோடு தெரிவித்தனர்.
‘யார் உதவியையும் யாசிக்காமல் நல்ல நிலையில் வாழ்கிறேன்’
ஆண்டிப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த கோட்டை கருப்புசாமி தெரிவித்ததாவது: நான் கைத்தறி நெசவு தினக்கூலி வேலை செய்து வருகிறேன். அதில் கிடைக்கக் கூடிய வருவாயினைக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.
தற்போது வயது முதிர்வின் காரணமாக என்னால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில், மருந்து, மாத்திரைகள் வாங்குவது போன்ற அவசர தேவைகளுக்குக் கூட பணம் தேவையென்றால் யாரிடம் கடன் வாங்குவது என்ற கேள்வி இருந்து வருகிறது. மற்றொரு நபரை எதிர்பார்த்தும் இருக்க வேண்டிய சூழலில் மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.
இந்நிலையில், கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நல வாரியத்தில் பதிவு செய்திருந்ததால், எனக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்கிறது. இந்த உதவித் தொகை அன்றாட வாழ்வுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
யாரிடமும் உதவி கேட்க வேண்டிய நிலை இல்லாமல், தற்போது நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். என்னைப் போன்ற தொழிலாளர்கள் நிலையைக் கருத்தில் கொண்டு பல்வேறு சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தான் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 18 தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியங்களின் கீழ் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது பொருளாதாரத்தினை மேம்படுத்துகிற வகையில், தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்து, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்பதே தேனி மாவட்டத்தைச் சார்ந்த தொழிலாளர்களின் எழுச்சிமிகு கருத்தாகும்.‘குழந்தைகளுக்கு வந்தது கல்வி உதவித் தொகை’
தேனி- அல்லி நகரம் நகராட்சியைச் சேர்ந்த பழனி மனைவி ஈஸ்வரி கூறியதாவது: நானும் எனது கணவரும் சலவைத் தொழில் செய்து, அதில் கிடைக்கக்கூடிய வருவாயினை கொண்டு, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒர் ஆண் குழந்தையை படிக்க வைத்து வந்தோம்.
இந்நிலையில் என் கணவர் எதிர்பாராதவிதமாக உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் அவருடைய இறப்பு எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிகவும் பேரிழப்பை தந்தது.
நான் தினந்தோறும் சலவைத் தொழில் செய்து கிடைக்கக்கூடிய சம்பளம் எங்களது அன்றாட உணவிற்கே சரியாக இருப்பதால், குழந்தைகளை படிக்க வைப்பதற்கு என்ன செய்வது, அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்று திக்கற்று இருந்தேன். இச்சூழலில், எனது கணவர் சலவைத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்ததன் மூலம், கணவரின் இறப்பிற்கான உதவித் தொகை ரூ.25 ஆயிரம் கிடைக்கப் பெற்றேன்.
அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் எனது குழந்தைகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையும் கிடைக்க வழிவகை ஏற்பட்டது.
குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கு அடிப்படையாகவும், எங்களுக்கு பேருதவியாகவும் அமைந்தது. எங்களைப் போன்ற தொழிலாளர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பங்கள் பயன்பெறுகின்ற வகையில், நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இரா.சண்முகசுந்தரம்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தேனி மாவட்டம்.
மு.ராஜசெல்வன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தேனி மாவட்டம்.



