கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வேளாண் உபகரணங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் வழங்கினர். உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்) தமிழ்மாறன் ஆகியோர் உள்ளனர்.



