fbpx
Homeபிற செய்திகள்வலி இல்லா முடி அகற்றும் ஸ்பிரே: ஆண்களுக்காக தயாரித்த ‘அர்பன்கப்ரு’

வலி இல்லா முடி அகற்றும் ஸ்பிரே: ஆண்களுக்காக தயாரித்த ‘அர்பன்கப்ரு’

ஆண்களுக்கான குரூமிங் பிராண்டான ‘அர்பன்கப்ரு’, இந்தியாவின் முதல் வலியில்லாமல் முடி அகற்றும் ஸ்பிரேயை ஆண்களுக்காக அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்தத் தயாரிப்பு நுரை வடிவில் வருகிறது. இது வலியில்லாமல் முடியை அகற்றும் மற்றும் சருமத்தை மென்மையாகவும் ஈரப் பதமாகவும் வைத்திருக்கும் டி-டான் பண்புகளையும் வழங்குகிறது.

இந்தத் தயாரிப்பு இந்திய பருவநிலைக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆண்களின் சருமத்திற்கு ஏற்றவாறு அனுபவம் வாய்ந்த தோல் மருத்துவர்களின் குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பல பயன்பாடுகள் கொண்ட இந்த முடி அகற்றும் ஸ்பிரே, இந்த பிராண்டின் ‘அப்கிரேட் யுவர்செல்ஃப்’ பிராண்ட் கொள்கையின் ஒரு தொடர்ச்சியாகும்.
அதன் தனித்துவமான கலவையில் கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு உள்ளது. கற்றாழையின் இயற்கை மூலப்பொருள் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

இது வறட்சியைக் குறைக்கவும், சருமத்தை முதிர்ச்சியாக்கும் தன்மையை எதிர்த்துப் போராடவும் மற்றும் சரு ம ஈரப்பதத்தைப் தக்க வைக்கவும் உதவுகிறது. இயற்கையான ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் தரும் எலுமிச்சை சாறு, இறந்த செல்களை நீக்கவும் அடை பட்ட துளைகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது மற்றும் சரும நிறத்தையும் பராமரிக்கிறது.

நன்கு ஆய்வு செய்யப் பட்ட உட்பொருட்களுடன் கூடிய இந்தத் தயாரிப்பு 6-8 நிமிடங்களுக்குள் தேவையற்ற முடிகளை விரைவாகவும் முழுவது மாகவும் நீக்குகிறது.

அர்பன்கப்ரு நிறுவனர் ஹேமந்த் ரவுலோ கூறியதாவது:
கடந்த சில வருடங் களாக, ஆண்களுக்கான குரூமிங் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இதன் விளைவாக, ஆண்கள் தங்களின் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளும் செயல்களில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்.
அறிமுகப்ப டுத்தப் பட்டுள்ள ஸ்ப்ரே, வேக்ஸ், டிரிம்மிங், ஷேவிங், முடி அகற்றும் கிரீம்கள் போன்ற வழக்கமான முடி அகற்றும் வடிவங்களில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

அர்பன்கப்ரு ஆண் களுக்கான குரூமிங் மற்றும் அழகை பே ணும் தயாரிப்புகளை தரத்து டனும், மலிவு விலையிலும் வழங்குகிறது. இதன் பல தரப்பட்ட தயாரிப்புகளில் முகம், முடி, தாடி, உடல் மற்றும் அந்தரங்க பகுதிக்கான தயாரிப்புகளும் அடங்கும்.

இந்தத் தயாரிப்புகள் ஆல்கஹால்-அற்றவை, வேக்ஸ்-அற்றவை. விலங்குகள் துன்புறுத்தப்படாமல் தயாரிக்கப்படுபவை. பிராண்டின் வலைத்தளம் மற்றும் அமேசான்-இல் கிடைக்கின்றன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img