திருப்பூரில் வனம் இந்தியா அறக்கட்டளையின் வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி, திருப்பூர் மண் டலத் தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ஸ்கை சுந்தர்ராஜ் பேசினார்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் சோமசுந்தரம், லியோ நிட்டிங் புரமோட்டர் பாலசுப்ரமணியம், வார்டு உறுப்பினர் கனகராஜ் ஆகி யோர் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
மரம் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பல இயற்கை ஆர்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் பலர் பங் கேற்றனர்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக வாராந்திர ஆய்வு கூட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



