தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும்செவலில் நேற்று (செப்.1) விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவனின் 306-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மக்கள் தொடர்புத் துறை மூலம் அரசு விழாவாக கொண்டாடப்ப டுவதையொட்டி, நெற்கட்டும்செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் பூலித் தேவன் கி.பி.1715 -ம் ஆண்டு ஆவணித் திங்கள் 16-ம் நாள் சித்திரபுத்திரதேவர், சிவஞான நாச்சியார் இருவருக்கும் மகனாகப் பிறந்தார்.
மாவீரன் பூலித்தேவன் அஞ்சா நெஞ்சராகவும், நிகரற்ற போர்வன்மை படைத்தவராகவும் திகழ்ந்து வந்தார். வீரமும் வலிமையும் மட்டுமின்றி அவர் நேர்மையும், பண்பும் நிறைந் தவர். தன்மானமும் சுதந்திர வேட்கையும் கொண்டு திகழ்ந்தார்.
அவரது பிறந்தநாளை முன் னிட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிநாடார் (தென்காசி), ராஜா (சங்கரன்கோவில்) மரு.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) ஆகியோர் மாவீரன் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தினை பார்வையிட்டு, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
இவ்விழாவில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.



