எச்டிஎப்சி மல்டி அசட் பண்ட் (திட்டம்), ஓராண்டில் நிர்ணயிக்கப்பட்ட 25.02 சதவீதம் காட்டிலும் 29.38 சதம் லாபமாக அளித்துள்ளது.
எச்டிஎப்சி அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர் அமித் கனத்ரா பேசுகையில், “சர்வேதச மற்றும் உள்நாட்டு வளர்ச்சி, நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி கொள்கைகள், தேவைக்கான மீட்பு, தடுப்பூசி திட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களின் லாப விகிதம் போன்றவை மிகவும் சாதகமான நிலையில் இருந்தது.
இந்தியாவில், கோவிட் 19 தொற்றுக்கு பின் நிறுவனங்களின் வணிக விகிதம் வலுவாகவே இருக்கிறது. இது முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பளித்து, நல்ல பலனை அளித்துள்ளது.
கோவிட் 3-வது அலையின்போதும் நிலையான மீட்சி, அதிக பணவீக்கம் மற்றும் வலுவான மதிப்பீட்டில் சந்தையின் முன்னேற்றம் போன்றவற்றிற்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் சொத்து ஒதுக்கீட்டு முறையை கையாள வேண்டும். பங்கு முதலீட்டில் பங்கேற்பதோடு மட்டுமின்றி, கடன் மற்றும் தங்க முதலீடுகளை பயன்படுத்தி, கீழ்நோக்கு மதிப்பு இழப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
எச்டிஎப்சி மல்டி பண்ட் அசட், முன்று வகையான முதலீடுகள், பங்கு, கடன் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு பொருத்தமானதாக இருக்கும்.
கடந்த கால செயல் திறன்கள் எதிர்காலத்திலும் நிலையானது அல்ல. தற்போதைய முதலீடு திட்டமும் மாறுதலுக்கு உட்பட்டது.
எச்டிஎப்சி எம்எப்ஃஏஎம்சி, முதலீட்டு திட்டங்கள் மீதான வருவாய்க்கு எவ்வித உத்தரவாதமும் உறுதியும் அளிப்பதில்லை.
தற்போதைய பார்வையில் மட்டுமே புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசிப்பாளர்கள், முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனையை பெற்று முதலீடு செய்யவும். முதலீட்டு முடிவுகள் மேற்கொள்வது அவரவர்களே பொறுப்பு.
மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் சந்தைகளின் போக்கு சார்ந்தது: அனைத்து திட்டங்கள் குறித்தஆவணங்களை கவனமுடன் படிக்கவும்.



