Homeபிற செய்திகள்ரூ.10 ஆயிரத்தை நேர்மையாக ஒப்படைத்த கோவை போலீஸ்காரர்

ரூ.10 ஆயிரத்தை நேர்மையாக ஒப்படைத்த கோவை போலீஸ்காரர்

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருபவர் கோவிந்தன் (42). இவர் இன்று காலை ரேஸ் கோர்ஸில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

அப்போது ஏற்கனவே பணம் எடுக்க வந்த நபர் விட்டு சென்ற ரூ.10,000 பணம் இருந்தது. இதனை பார்த்த போலீஸ்காரர் அந்த பணத்தை பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில் ஏ.டி.எம் மையத்துக்கு சொந்தமான வங்கி கிளை அலுவலகத்திற்கு சென்றார்.

பின்னர் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்.
போலீஸ்காரரின் இந்த செயலை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர். இந்த பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img