fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே இ காம் எக்ஸ்பிரஸ் மளிகைப்பொருட்கள் மையம் திறப்பு

கோவை அருகே இ காம் எக்ஸ்பிரஸ் மளிகைப்பொருட்கள் மையம் திறப்பு

இ காம் எக்ஸ்பிரஸ் லிமிட்டெட் , தமிழ்நாட்டில் கோவை அருகே பல்லடத்தில் ஒரு முழுமையான ஃபுல்ஃபில்மெண்ட் மையத்தைத் தொடங்குகிறது.
பிராந்தியத்தின் இந்த பகுதியில் அமைந்துள்ள முதல் ஃபுல்ஃபில்மெண்ட் மையமாகும்.

இந்த மையம் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படவேண்டிய வகை உணவுப்பொருட்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். .

தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் முதலாவது மளிகைப் பொருட்களின் ஃபுல்ஃபில்மெண்ட் மைய மாகவும், தென் பிராந்தியத்தில் 7 வது இடமாகவும் விளங்குகிறது. மளிகை விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான 50+ டார்க் ஸ்டோர்களுக்கு இந்த வசதி சேவை செய்யும்.

பெங்களூரு, வடக்கு கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு மற்றும் தெற்கு தமிழ்நாடு ஆகிய இடங்களை எளிதாக அணுகும் வசதியை கோவை வழங்குவதால், நெட்வொர்க் மையத்தை கருத்தில் கொண்டு யுக்திபூர்வமான அமைவிடத்தில் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது.

இகாம் எக்ஸ்பிரஸின் தலைமை வணிக அதிகாரி திபஞ்சன் பானர்ஜி, கூறியதாவது: இந்திய ஆன்லைன் மளிகை சந்தை 2021 முதல் 2028 வரை கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 37.1% அளவுக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்த வேலை வாய்ப்புகள், வணிக உள்கட்டமைப்பு மற்றும். வீட்டு வருமானம் ஆகியவற்றின் காரணமாக தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்தியா தலைமை தாங்கி வழிநடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழமைவில் , கோவை இ-மளிகைக்கான மிக முக்கி யமான சந்தையாக உள்ளது, ஏனெனில் அதன் யுக்தி பூர்வமான அமைவிடமானது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது.

அது எங்கள் வாடிக் கையாளரின் அணுகலை விரிவுபடுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விரிவடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் இது நிறுவனத்தின் வணிக செயல் திறன்களை விரிவுபடுத்தவும் உதவும்.

அதிகரித்து வரும் மளிகைப்பொருட்களுக்கான ஆர்டர்களைக் கையாள 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை புதிய ஃபுல்ஃபில்மெண்ட் மையம் பணிக்கு அமர்த்தும். கோவை நிறுவனத்தில் 30 முதல் 40% பணியாளர்கள் பெண்களாக இருப்பதை நிறுவனம் உறுதி செய்யும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img