fbpx
Homeபிற செய்திகள்ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் வழங்கல்

ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் வழங்கல்

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவித் தொகை உள்ளிட்ட ஒருலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை, மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் வழங்கினார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட த்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் வழங்கி வருகிறார்.

கொரோனா தொற்றால், உயிரிழந்த 81-வது வட்டக் கழக திமுக செயலாளர் ஜாக்கீர், குடும்பத்தினருக்கு அவர் ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், தேவிகண்ணன், சம்பத்குமார், சிவசாமி, வாணிஸ்ரீ ஆகியோருக்கு மருத்துவ உதவியாக, தலா 5 ஆயிரம் ரூபாயும், விஜயா என்ற பெண்ணுக்கு தையல் மிஷின் என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நா.கார்த்திக் வழங்கினார்.

இந்த நிகழ்வில், பகுதி கழக பொறுப்பாளர்கள் பாலசுப் பிரமணியம், பத்துரூதீன், வார்டு செயலாளர்கள் மேகநாதன், நியான்குமார், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், கேஆர்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img