fbpx
Homeபிற செய்திகள்சக்தி மசாலா இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு அவ்வையார் விருது- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சக்தி மசாலா இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு அவ்வையார் விருது- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குனர், சக்தி தேவி அறக்கட்டளையின் அறங் காவலர் டாக்டர் சாந்தி துரைசாமிக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சமூகச் சீர் திருத்தம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறை களில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.

டாக்டர் சாந்தி துரைசாமி, கடந்த 44 ஆண்டுகளாக சக்தி மசாலா சமையல் பொடிகள் தயா ரிக்கும் நிறுவனத்தை, கணவர் டாக்டர் பி.சி.து¬ ரசாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

கடந்த 1977-ல் தொடங் கப்பட்ட நிறுவனத் தில் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். சக்தி தேவி சாரிட்டபிள் டிரஸ்ட், சக்தி மறுவாழ்வு மையம், சக்தி மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி ஆட்டிசம் சிறப்புப்பள்ளி ஆகியவற்றை அரசு அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.

15-க்கும் மேற்பட்ட கிராமப் புறங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சக்தி மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

மருந்து மாத்திரைகள் குறைந்த விலையிலும், ஆய்வக பரிசோதனைகள் சலு கைக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. 41 அரசு பள்ளிகள் தத்ª தடுக்கப்பட்டு ஒட்டு மொத்த மேம்பாட்டுக்கு உதவுகிறது.

சிறந்த மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் உதவித் தொகை, மேற்படிப்புக்கு பண உதவி என்று கடந்த 21 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

தளிர் திட்டத்தில் இலவச மரக்கன்று வழங்குவதுடன், மரம் வளர்ப்போருக்கு 21 ஆண் டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் விருதுக ளும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக் டர் பட்டம் வழங்கி உள்ளது.

இவ்வாறான சமூக சேவைகளுக்காக சக்தி மசாலா நிறுவன இயக்குனர் டாக்டர் சாந்தி துரைசாமிக்கு, சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வையார் விருது வழங்கினார். விழாவில், டாக்டர் பி.சி.துரைசாமி கலந்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img