தொற்றுநோய் போன்ற உலகளாவிய சவால்களை சந்திக்கவும், அதற்கு தீர்வு காணும் நாடுகளுக்கு அருகே பணியாற்ற வேண்டும் என 88 சதவீத இந்தியர்கள் எண்ணுகின்றனர் என்று எக்ஸ்போ 2020 -ன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கோவிட்19 தொற்று நோயால் ஏற்பட்ட எதிர்பாராத சூழ்நிலையால், மக்களின் மனநிலை அறிய 24 நாடுகளில் 22 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. யூகோப் உடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தொற்று நோய்க்கு முன்பான 2019-ல் இதேபோல ஓர் ஆய்வு நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரும், எக்ஸ்போ 2020 துபாயின் இயக்குநருமான ரீம்அல்ஹாஷிமி கூறியதாவது:
நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை உலகமக்கள் எவ்வாறு நம்புகிறார்கள் என்று புரிந்து கொள்ள எக்ஸ்போ 2020 ஆய்வு பெருமளவு உதவியது.
நாம் நமது முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்றாக பணிபுரியவும், விருப்பங்களை, கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும், இத்தகைய ஆய்வுகள் தெரிவிப்பதால், நமக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன என்றார்.
கோவிட் 19 தொற்று நோய் தாக்கத்திற்குப் பின் நடைபெற இருக்கும் மிகப் பிரம்மாண்ட நிகழ்வு எக்ஸ்போ 2020. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 31 மார்ச் 2022 வரைஇந்தஎக்ஸ்போநடைபெறஇருக்கிறது.
புதியஉலகைபடைக்கஉலகெங்கிலும்இருந்துபார்வையாளர்களைதுபாய்வரவேற்கிறது. மனித படைப் பாற்றல், புதுமை, முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்தின் ஆறுமாத கொண்டாட்டமாக இது அமைய இருக்கிறது.
எக்ஸ்போ 2020-ன் சமீபத்திய உலகளாவிய கணக்கெடுப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.expo2020dubai.com/en/news -வைப் பார்வையிடலாம். எக்ஸ்போ 2020-ல் இந்திய பெவிலியன் பற்றிய கூடுதல் தகவல்களையும் இங்கே காணலாம்.



