fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கம் குவித்த கோவை மாணவ, மாணவிகள்

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கம் குவித்த கோவை மாணவ, மாணவிகள்

சப் ஜூனியர் பிரிவுக்கான சிலம்பப் போட்டிகள் கன்னியாகும ரியில் நடைபெற்றது. மாநில அளவிலான போட் டியில், கோவை மாவட்டம் சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டு 8 தங் கப் பதக்கங்களும், 8 வெள்ளி பதக்கங்களும், 6 வெண்கலப் பதக்கங்களும் வென்று தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.

குழு ஆயுத வீச்சு: 1. பிரதக்ஷிணா – தங்கப் பதக்கம் (டாக்டர் தசரதன் பன்னாட்டுப் பள்ளி), 2. ரியா &- தங்கப்பதக்கம் (டாக்டர் தசரதன் பன்னாட்டுப் பள்ளி), 3. தீபிகா – தங்கப்பதக்கம் (யுவா பப்ளிக் ஸ்கூல்).

ஆயுத கோர்வை ஜோடி: 1. கவின் – தங்கப்பதக்கம் (டாக்டர் தசரதன் பன்னாட்டுப் பள்ளி), 2. திவாகர் – தங்கப்பதக்கம் -(சைதன்யா பள்ளி), 3. ஹர்ஷினி – வெள்ளிபதக்கம் (எ.வி.பி ஸ்கூல்), 4. விசாலினி – வெள்ளிபதக்கம் (எச்.ஐ. எச்.எஸ்-ஜெ.சி ஸ்கூல்).

கம்பு சண்டை: 1. பிரனேஷ் – வெள்ளி பதக்கம் (வித்ய விகாஷ் பள்ளி), 2.தர்சன் -வெள்ளிபதக்கம்- (அரசு மேல்நிலைப் பள்ளி, மலுமிச்சம்பட்டி), 3. முல்லைவேந்தன் -வெள்ளிபதக்கம் (அமிர்தா வித்யாலயா), 4. கமலி – தங்கப் பதக்கம் (நிர்மலா மாதா கான்வென்ட்), 5. திவ்யாஸ்ரீ &- வெண்கலப்பதக்கம்- (எட்வர்ட்ஸ் குருகுலா), 6. விவேகா – வெண்கலப் பதக்கம் (சி.ஸ்.அகாடமி), 7. பி.யு. ஹரிஷ்மிதா -வெண்கலப்பதக்கம் (AMS ஸ்கூல்), 8. நவநீத கண்ணன் – தங்கப்பதக்கம் (கஸ்தூரி மெட்ரிக் ஸ்கூல்), 9. அஸ்வின் &- வெண்கலப்பதக்கம் (ஸ்ரீ வெங்கட லக்ஷ்மி ஸ்கூல்), 10. ஜெகதீஸ்வர் -வெள்ளிப்பதக்கம் (-தர்மசாஸ்தா பள்ளி), 11. தமிழிசை -வெள்ளிப் பதக்கம் (ஷாஜஹான் மேல் நிலைப்பள்ளி), 12. அருள் – வெண்கலப்பதக்கம் (ஷாஜஹான் மேல்நிலைப் பள்ளி).

ஒற்றை சுருள்வாள்: 1. சன்ஜெய் – வெள்ளிபதக்கம் (Dr. PGV ஸ்கூல்), 2. அக்ஷதா – தங்கப் பதக்கம் (- நேஷனல் மாடல் ஸ்கூல்).

இரட்டை வாள் வீச்சு: 1.நேத்ர ஸ்ரீ – வெள்ளி பதக்கம் (சிசு வித்யோதயா ஸ்கூல்).
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை மாவட்ட செயலாளர் Dr.சுதாகர் மற்றும் துணை தலைவர் டாக்டர் செல்வகுமார், பயிற்சியாளர் சரண்ராஜ், ரஞ்சித் குமார் மற்றும் அருண் பாண்டியன் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img