fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

மாநில அளவிலான கராத்தே போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கோவை, சுந்தராபுரம் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

எய்ம்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் நடந்தப்பட்ட இந்தப் போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் 50க்கும் மேற்பட்ட கராத்தே ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு எய்ம்ஸ்டு மார்ஷல் ஆர்ட்ஸ் பவுண்டர் மற்றும் தலைவர் மற்றும் கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர் ரெய்ன்ஸி பா. விஜய்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தலைமை தாங்கினார். சிகான். கிருஷ்ணசாமி, சிகான். துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூபி ஏஞ்சல் ரோஸ் மற்றும் சக்ரா பவுண்டேஷன் தலைவர் வி.நிரஞ்சனாதேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ். சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் ஈஸ்வரன் ஊக்க உரை நிகழ்த்தினார்.

முன்னாள் நகராட்சி செயல் அலுவலர் ராம்தாஸ் மற்றும் இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் தலைவர் பா. அறிவொளி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img